கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருப்பாரேயானால் உங்களுக்கு சில எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் ஆனால் நீங்கள் எதிர்ப்புகளை மேற்கொள்ளும்படி வெற்றி சிறந்தவர்களாக மாறும்படி கர்த்தர் உங்களுக்கு உதவி செய்கிறவராக துணை புரிகிறவராக காணப்படுகிறார்.
கோத்திர பிதாவாகிய யாக்கோபு தம்முடைய குமாரர்களை கூப்பிட்டு இறுதி நாட்களிலே அவர்களுடைய கோத்திரங்களுக்கு சம்பவிப்பதை குறித்து தீர்க்கதரிசனமாக உரைத்தார். அவர் யோசேப்பை குறித்து "யோசேப்பு, கனி தரும் செடி; அவன் நீரூற்றண்டையில் உள்ள கனிதரும் செடி; அதன் கொடிகள் சுவரின் மேல் படரும்" என்றார். கூடவே அவர்களுக்கு வரவிருக்கும் துன்பங்களையும் துன்பங்களுக்கு மேலாக கர்த்தருடைய துணையோடு அவர்கள் அடையப்போகும் வெற்றியையும் குறித்தும் கூட கூறினார்."வில்வீரர் அவனை அவனை மனமடிவாக்கி அவர் மேல் எய்து அவனை பகைத்தார்கள்." என்று யாக்கோபு கூறுகிறார். முன்னேற்றத்திற்கு விரோதமாக செழிப்புக்கு விரோதமாக வில்வீரரை போன்ற மனிதர்கள் தங்களுடைய முழு முயற்சியையும் பயன்படுத்தி அவனை மனமடிவாக்குகிறதை நாம் காண முடியும். ஆனால் தொடர்ந்து நாம் யாக்கோபுடைய வார்த்தைகளை கவனிக்கும்போது போது "அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன". என்று சொல்லுகிறார்.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! மனிதர்களுடைய வார்த்தைகளைக் கண்டு, காயப்படுத்தக்கூடிய சொற்களைக் கேட்டு பயப்படாமல், கலங்காமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். யோசேப்பின் புயங்களை பலப்படுத்தின கர்த்தருடைய கரம் உங்களையும் பலப்படுத்தும். கர்த்தர் உங்களுக்கென்று தந்த வார்த்தைகள், தீர்க்கதரிசனங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும்படி அவர் உங்களுக்குத் துணை நிற்கிறவராக காணப்படுகிறார். நீங்கள் மென்மேலும் வளர்ந்து பெருகுவீர்கள்.
ஏசாயா 41:10- நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
தம்முடைய பிள்ளைகளை பலப்படுத்துகிற சகாயம் பண்ணுகிற கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
No comments:
Post a Comment