சங்கீதம் 37:35-ல் சங்கீதக்காரன் கண்ட ஒரு துன்மார்க்கனைப் பற்றி அவர் கூறுவதைக் காண முடியும். "கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்; அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தை போல் தழைத்தவனாயிருந்தான் ஆனாலும் அவன் ஒழிந்து போனான்" என்று கூறுகிறார்.
கொடியவன், பலவந்தனான துன்மார்க்கன்: தன் பலத்தினாலே வலுக்கட்டாயமாக அநீதியை துணிந்து செய்யக்கூடிய மனிதன். தனக்கு ஏற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரம்: வறட்சியான பிரதேசங்களில் வளரக்கூடிய வறட்சியை தாங்க கூடிய மரங்கள் உண்டு அது அந்த மரத்திற்கு ஏற்ற நிலம். அது பட்டுப்போவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவன் நிலை நிற்கவில்லை அழிந்து போனான்.
துன்பங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே ஆகவே கலங்காதீர்கள். நீங்கள் திராணிக்கு மேலாக சோதிக்கப்படும்படி அவர் ஒருபோதும் அனுமதிப்பதே இல்லை. உங்களை சூழ்ந்திருக்கும் கார்மேகங்கள் அகன்று போகும். கர்த்தருடைய வெளிச்சம் உங்கள் மேல் உதிக்கும். வேதாகமப் பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையிலும் கூட அனேக துன்பங்கள் வந்தது. ஆனால் அந்த துன்பமான காலங்கள் முடிந்த பின்பு அவர்களுடைய முன் நிலைமையை பார்க்கிலும் அவர்களுடைய பின் நிலைமை ஆசீர்வதிக்கப்பட்டது. அவர்கள் வெற்றி சிறந்தவர்களாக மாறினார்கள். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் எப்படிப்பட்ட பாதைகளின் வழியாக நீங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தாலும் உங்களை விடுவிக்கும்படி உங்களை பாதுகாக்கும் படி கர்த்தர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் நிச்சயமாகவே தோற்றுப் போவதில்லை.
எரேமியா 15:22 வது வசனத்தில் கர்த்தர் சொல்லுகிறார், "நான் உன்னை பொல்லாதவர்களின் கைக்கு தப்புவித்து உன்னை பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்".
No comments:
Post a Comment